மந்திரந்தான் செய்திடுதே மாலை நேரம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(1, 3, 5, 7 சீர்களில் மோனை)

மனசுக்குள் மத்தாப்பூ மாயை போலே
..மந்திரந்தான் செய்திடுதே மாலை நேரம்!
தினமுந்தான் உனைத்தேடித் தெருவில் சென்று
..திசைபார்த்து நிற்கின்றேன் இங்கும் அங்கும்!
நினைவெல்லாம் நீயேதான் நெஞ்சில் வைத்தேன்
..நித்திலமே கண்பாராய் நீதான் இங்கு!
தனித்தன்மை கொண்டவளே தங்க மங்கை
..தவிக்கவிட்டுச் செல்லாதே தமியேன் என்னை!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Aug-22, 9:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே