உழைக்க உயர்வு வரும்

நேரிசை வெண்பா

அநநாள்தே ரையர் அழகிய பாடலதில்
இந்நாள் கழலும் இனியமோனை -- எந்நாளும்
அந்நிய மில்பா(ர்) அமைப்பை அழிவில்லா
அந்தமென்ற ழுத்திச்சொல் வாய்




வாதமொடு சூதிகா வாதம் சிரசுநோய்
மோதுசெவி நோய்கபநோய் மூடுசுரம் - ஓதுகின்ற
மூலக் கடுப்பு முதிர்பீந சம்போக்கும்
ஞாலச் சதகுப்பை நாடு

பேசுவது எப்படியும் இருக்கலாம்., அது உரைநடை . ஆனால் கவிதை எழுத சற்று நேரம் செலவழித்து
மரபில் எழுதவேண்டும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தேரையர் என்னும் சித்தர் தான் எழுதிய வெண்பாவில் மோனைகளை எழுத வேண்டிய இடத்தில் எழுதி எப்படி அழகு படுத்தியுள்ளார் கவனியுங்கள்(. ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரி லும் மோனை எழுத்து உள்ளது )



..,..

எழுதியவர் : பழனி ராஜன் (6-Aug-22, 7:30 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே