நாகணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தலைவலிநீர் ஏற்றந் தலையிடிப்பு குத்தல்
தொலையா மலட்டுநோய் சோபை - நிலைவிழிநோய்
பாகணச்சொன் மின்னே பருமுதர ரோகமும்போம்
நாகணத்தி னாலே நவில்

- பதார்த்த குண சிந்தாமணி

இது தலைவலி, நீரேற்றம், தலையிடிப்பு இவற்றில் குத்தல், மலடு, வீக்கம், கண்ணோய், பெருவயிறு, உதரரோகம் இவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-22, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே