மாசிக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

அக்கரங்கள் போக்கிவிடும் ஆறாத வெப்பாற்றும்
மெய்க்குறுதி மாசிக்காய் மேன்மேலும் - தக்கதொரு
பால(ர்)கண நோய்போக்கும் பன்மேக முந்தொலைக்கும்
வேலனைய கண்ணாய் விளம்பு

- பதார்த்த குண சிந்தாமணி

மாசிக்காய் அக்கரம், வெப்பம், குழந்தைகளின் கணநோய், பல மேகங்கள் இவற்றை நீக்கி உடற்குப் பலந்தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Aug-22, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே