அனுபவம்

உனக்குத் தெரியும் மூன்று நட்சத்திரங்கள்
எனக்கும் தெரிகிறது
நீ பார்க்கும் நிலவை
நானும் பார்க்கிறேன்
உன்னைக் கடக்கும் அதே சூரியன்
என்னைக் கடக்கிறது
ஆனால்
நீ இருப்பது ஊரில்
நான் இருப்பது சேரியில்

எழுதியவர் : க. அமரேசன் (8-Aug-22, 10:07 am)
சேர்த்தது : K AMARESAN
Tanglish : anupavam
பார்வை : 152

மேலே