ஐம்பொறிகளால் ஆங்காலமும், போகுங்காலமும் துன்பம் – அறநெறிச்சாரம் 147

நேரிசை வெண்பா

ஆர்வில் பொறியைந்திற் காதி இருவினையால்
தீர்விலநீ கோதாதி சேர்விக்குந் - தீர்வில்
பழியின்மை யெய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு. 147

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

நீ செல்வம் நிரம்பப் பெற்றிருந்த பொழுது திருப்திப்படுத்த இயலாத மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளின் இன்பத்திற்கும் ஆளாகி மகிழ்கிறாய்.

நீ வறுமையுற்ற காலத்தில் நல்வினை, தீவினை என்னும் இருவினைகளால் உன்னை விட்டு விலகயியலாத குற்றம் முதலியவற்றில் படிவிக்கும்படியான, நீங்குதலில்லாத பழியும், இத்தன்மையதென்று சொல்ல முடியாத கொடிய நிலையும் அப்பொறிகளின் வழியாக ஏற்படுதலும் கூடும்.

கருத்து:

திருப்திப்படுத்த இயலாத ஐம்பொறிகளின் இன்பத்திற்கு அடிமையாகாமல் வாழ்க் கற்றுக்கொள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-22, 1:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே