புத்தகம்போல் விரியும் உன்புன்னகை எனக்கு புதிய நூலகம்

புத்தகம்போல் விரியும் உன்புன்னகை
-------எனக்கு புதிய நூலகம்
நித்தம் வருகை தரும் நானும்
------அங்கே ஒரு வாசகன்
தத்துவம் பேசுதோ மௌனம்
----- போதிக்குதோ காதல் ஞானம்
எத்தனை மாலைகள் கவியுதடி உன்
-----சித்திரவிழிகள் விரிந்து மூடுகையில்
==================================================================================================
புத்தகம்போல் விரியும் உன்புன்னகை எனக்கு புதிய நூலகம்
நித்தம் வருகை தரும் நானும் அங்கேஒரு வாசகன்
தத்துவம் பேசுதோ மௌனம் போதிக்குதோ காதல் ஞானம்
எத்தனை மாலைகள் கவியுதடி சித்திரவிழிகள் விரிந்து மூடுகையில் !
---இது யாப்பினர்க்கு

புத்தகம் போல்விரியும் புன்னகை நூலகம்
நித்தம் வரும்நானும் அங்கேயோர் வாசகன்
தத்துவம் காதல்ஞா னம்பேசு தோமௌனம்
எத்தனைமா லைவிழி யில் !
----இதுவும் யாப்பினர்க்கு

புத்தகம் போல்விரியும் புன்னகை நூலகம்
நித்தம் வரும்நானும் வாசகன் --சித்திரமே
தத்துவம் காதல்ஞா னம்பேசு தோமௌனம்
எத்தனைமா லைவிழி யில்
---இதுவும் யாப்பினர்க்கு

கற்பனை ஒன்றுதான் என்றாலும் புதுக்கவிதை வடிவம் மற்றும்
யாப்பின் வடிவம் ஆர்வலருக்கும் தந்திருக்கிறேன்
இலக்கியம் ரசிக்க இதயம் இருந்தால் போதும்
எந்த இலக்கிய வடிவமைப்பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை .

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-22, 12:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே