முழுசுதந்திரம் என்று வருமோ 555

***முழுசுதந்திரம் என்று வருமோ 555 ***


சுதந்திரம்...


சுதந்திர இந்தியா இன்னும் சுதந்திரம்
கிடைக்கவில்லை மக்களுக்கு...

உணவுக்கு வழியில்லை
நாட்டு மக்களுக்கு...

நியாய விலை கடையில்
தேசியகொடி விற்பனையாம்...

வாழவழியின்றி
தவிக்கும் மக்க
ளிடம்...

கார்பரேட்காரனுக்கு வரிக்கட்ட
சொல்லும் சுதந்திர தினம்...

தேசியக்கொடி
ஏற்றினால் தேசபக்தன்...

இல்லையேல்
அவன் தேசத்துரோகி...

அயல்நட்டில் வேலை
செய்பவ
னிடம் கேட்டுப்பார்...

நாட்டு பற்றையும் தேசியக்கொடியின்
மதிப்பையும் அவன் சொல்லுவா
ன்...

உலக அரங்கில் மூக்குச்சளி
தேசியக்கொடியில் சிந்தியவன் தேசியவாதியாம்...

தலைநிமிர்ந்து மரியாதை
செய்யும் மக்கள் தேசத்துரோகியாம்...

வெள்ளையர்களிட
ம் இருந்தபோது
வரிபோட்டான் உப்புக்கு...

கதிர்வேட்டிகாரன் போட்டான்
சாலையில் நடப்பதற்க்கே வரி...

வெள்ளையடிக்க
பணமில்லை அரசு கட்டிடம்...

மக்களிடம்
கொள்ளையடிக்கும் அரசாங்கம்...

வெள்ளைக்காரன்
சுரண்டினான் நாட்டின் வளத்தை...

கொள்ளைக்காரன் உறுஞ்சுகிறான்
நாட்டு மக்களின் இரத்தத்தை..
.

ஏறிக்கொண்டே செ
ல்லும்
விலைவாசி உயர்வு...

மக்கள் சிந்திக்கும் நேரத்தில்
சாதி ,மத பிரிவினைவாதம்...

தூண்டிவிடும்
கதிர்வேட்டி கூட்டம்...

எப்படி ரசிக்க
முடியும் சுதந்திரத்தை...

மூன்றுவேளை
உணவு உண்டு...

தலைநிமிர்ந்து என்று தேசியக்கொடியை
ரசிக்கிறானோ கூலி தொழிலாளி...

அன்றுதான் நாட்டின்
முழுசுதந்திர தினம்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-Aug-22, 5:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2623

மேலே