சொல்ல துடிக்குது மனசு

கனவில் கூட
கான கூடாத நிஜம்
உன் வாழ்க்கை

மனிதன் பிறப்பு
மகத்துவம் என்றால்
ஏன் இல்லாமல்
போனது உன் வாழ்க்கையில்

நெடிய பயணம் உனக்கு
மட்டும் வருத்தமாய்

நீ செய்த தவறுக்கு
தண்டனை
என்று என்னாலும்
உன்னாலும் ஏற்று
கொள்ள முடியாது

பிறவி பயன் என்றும்
சொல்வதற்கு இல்லை

காலம் சொல்கிறது
கடந்து போ
என்று என் வலியை
சொல்வதற்கு யாரும்
இல்லை
கடவுளே சில நேரம்
என்னை
கருணை இல்லாமல்
பார்க்கிறான்

என்னிடம் எல்லாம்
இல்லை
என்று தெரிந்தும்
நான் ஏன்
உன்னை சரி
செய்ய முயற்சிக்கிறேன்

நெருப்பில் நின்றால்
சுடும் என தெரிந்தும்
நிற்கிறேன்
நெடு காலமாய்
உனக்காய்

கடவுள் கருணை
வேண்டும்
உனக்கும்
எனக்கும்

சுயநலமாக உன்னிடம்
நான் இருந்ததாக
எனக்கு
நினைவு இல்லை
இருந்தால்
சத்தியமாய் அது
சுயநலம்மாய் இருக்காது

உன் மேல் கடவுள்
கருணை
இல்லை என்றாலும்
உன் மீது பாசம்
கொள்ள
சில ஜீவனும்
உண்டு
இந்த பூவுலகில்....

எழுதியவர் : Karthick (15-Aug-22, 11:17 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 135

மேலே