சமுதாயக் கவிதை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*சமுதாயக் கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்று
இயேசுவை
சிலுவையில்
அறைந்த போது
உண்டான
வலியை விட ......
இன்று
இயேசுவின் கொள்கைகளை
சிலுவையில்
அறைந்திருப்பதுதான்
அதிகம் வலித்திருக்கும்
இயேசுவிற்கு.......!!!
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
அசோகா்
சாலை ஓரங்களில்
புளிய மரத்தை நட்டார்
நிழலுக்காக....
நாமும் நட்டோம்
புளிய மரங்களை
பிடுங்கி எறிந்து விட்டு
அவற்றின்
அஞ்சலிக்காக
அரளிச்செடியை.....!!!
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
அன்றைய கண்ணப்பர்
கடவுளுக்காக
தன் கண்ணையே !
பிடிங்கினார்.....
இன்றைய
கண்ணப்பர்களும்
கடவுளுக்காக
கண்களை
பிடுங்குகின்றனர்
அடுத்தவர் கண்களை....!!
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
துச்சாதனன்
திரௌபதியின் துகிலை
உரித்தப் போது
கண்ணன் வந்து
காப்பாற்றினான்.....
இன்றும்
பல திரௌபதியின்
துயில்கள் உரிக்கப்படுகிறது.....
ஆனால்
கண்ணன் வரமாட்டான்....
ஏனென்றால் ?
துகில் உரிப்பதே
கண்ணன் தான்....!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷