ஒற்றை அழகன்

ஒற்றை அழகன்

நிலாத் தோழியின்
முகம் மறையத் தொடங்கிட...
கட்டிலில் தூங்கிய
எனக்குள்ளோ
விடியலின் சாயல்...
கண்களைக் கசக்கி எழுந்த எனக்குள்ளோ
காலைக் கதிரவனின்
அழகினைக் கண்டிடும் ஆவல்...

காலைக் கடனை முடித்தவுடனே
சூடான தேனீர் பானத்தை
நா சுவித்திட தூண்டிட ...
சூடான பானத்தோடு
திரைச் சீலைகளை நீக்கி
கண்ணாடியினூடே
கண்கள் கண்டது என்னவோ
காலைக் கதிரவனின் கதிர்களின் கொள்ளை அழகைத் தான்...

ஒற்றை ஆளாய்
ஒய்யாரமாய் ஒளி வீசும்
அவன் அழகோ
மனதை மயக்கத் தான் செய்கிறது...

ஒரு மிடறு அருந்தி
ஒற்றைப் புன்னகை சிந்தி
அவன் முகம் பார்க்கையில்
மனதினுள்ளே பரவசம்...
உடலுக்குள்ளோ உற்சாக ஊற்றெடுப்பு...

காலைக் கதிரவனின்
அழகிய தரிசனத்தை
அழகாய் ரசித்து அமைதி காண
இப்பொழுது
நேரம் கிடைப்தில்லை
வேலைக்கு வேகமாய் செல்ல வேண்டுமென்பதனால்...

நாள்தோறும் வருகின்றான்
ரசித்திட நான் தான் அவ்விடம் இல்லை...
என் இடமோ வெற்றிடமாய்...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (18-Aug-22, 12:25 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : otrai azhakan
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே