நிலவு
கவிஞன் நான் எனக்கேன்
நிலவின் மீது
இத்தனை பற்றுதல்
நிலவின் ஒளியோ
கதிரவன் ஒளியின் எதிரொளி
கதிரவன் ஒளி எரித்துவிடும்
நிலவின் ஒளி எதிரொளியாயினும்
நமக்கு இதம் தரும் தண்ணொளி
நிலவை கவிஞன் நான்
ஒரு ஞானியாய்க் காண்கின்றேன்
இறைவன் கதிரவனுக்குள் இருந்து
ஒளியாய் ஒளிர்கின்றான்
உலகின் ஜீவ ராசிகள் வாழ்ந்திட
கதிரவன் ஒளியைப் பெற்று
நமக்கு குளுமைத் தரும்
நிலவு எல்லாம் வல்ல இறைவனிடம்
தண்ணொளி வாங்கி வீசுகிறது
வல்லவனிடம் தவத்தால் ஞானம் பெற்று
உலகோர்க்கு அளிக்கும் ஞானிபோல
நிலவு கவிஞன் எனக்கு
என்றுமே அள்ளி அள்ளி
ஞானம் தரும் (கற்பனை )
ஞானி, தவசீலன்
நிலவு என் காதலன் காதலி
நண்பன் பிள்ளை எல்லாம்
ஞானியின் ஞானத்தில்
எல்லாம் காண்பது போல