344 இசை நன்மை நட்பெல்லாம் தருவது இன்சொல் – இனிய சொற்கூறல் 1

சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)
(தந்ததன தந்ததன தந்ததன தந்தா)

வட்டவுல கெட்டுமிசை மட்டறநி ரப்பும்
வெட்டவரு துட்டரைவி லக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ. 1

– இனிய சொற்கூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இனிய சொல் ஒருவரது புகழை வட்டமான உலகின் எட்டுத் திசையிலும் அளவில்லாமல் நிறைவிக்கும். வெட்டிக் கொல்ல வருகின்ற தீயவரை நீக்கி உன் வசமாக இணங்கச் செய்யும்.

இனிய சொல்லினால் இழப்பு வேறு ஏதும் இல்லை. எப்படிப்பட்ட மக்களையும் விருப்பத்துடன் நண்பராக்கிக் கொள்ளும் பிணைப்பை உருவாக்க உதவும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இசை - புகழ். கட்டு - பிணைப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 4:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே