345 எல்லாக் கேடும் தருவது இழிசொல் – இனிய சொற்கூறல் 2

சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)
(தந்ததன தந்ததன தந்ததன தந்தா)

இக்குவல யக்கணிழி வுக்கிடம தாகும்
பக்கரொடு மக்க(ள்)பகை புக்கவழி பண்ணும்
துக்கமும்,வி ளைக்குமொரு துக்கமும்,வி ளைக்குங்
குக்கனை,நி கர்க்குமவர் கக்குமிழி கூற்றே. 2

– இனிய சொற்கூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இழிவான சொல் பேசும் நாய்க்கு நிகரான ஒருவரது பேச்சு இவ்வுலகத்தில் இழிவுக்கு இடம் தரும்.

தங்கள் இனத்தாரோடும், உறவினரோடும் பகை ஏற்பட வகை செய்யும்.

சாவைத் தரும்படியான ஒரு நோயைத் தரும்” என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார். .

குவலயம் - உலகம். பக்கர் - இனத்தார்.
துக்கம் - சாவு. துக்கம் - நோய். குக்கன் - நாய். கக்குமிழி = கக்கும் + இழி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 4:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே