பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து - உண்மை விளக்கம் 9

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்கனல்சுட்(டு) ஒன்றுவிக்கும் ஓவாமல் – வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கிலா காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. 9

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

பிருதிவியானது விடயங்களிலே கடினகுணத்தைக் கொடுத்துக் கொண்டு நிற்கும்,

அப்புவானது விடயங்களிலே நெகிழ்ந்த குணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும்,

ஒள்ளிய தேயுவானது விடயங்களிலே சுட்டு ஒன்றுதலைப் பண்ணிக்கொண்டு நிற்கும்,

வளப்பத்தையுடைய வாயுவானது நீங்காது பரந்து சலித்து விடயங்களைத் திரட்டும்,

விசாரிக்குமிடத்து ஆகாயம் நிரந்தரமாய் நிறைந்து விடயங்களுக்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டு நிற்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே