சதாசிவரும் அன்றே அநுக்கிரகர் ஆம் - உண்மை விளக்கம் 8

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

படைப்பன் அயனளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் – திடப்பெறவே
என்றுந் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்
அன்றே அநுக்கிரகர் ஆம் 8

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

பிரமா சிருஷ்டிப்பன், செந்தாமரை மலர் போலுங் கண்ணையுடைய விஷ்ணு இரக்ஷிப்பன், சொல்லுமிடத்து உருத்திர மூர்த்தி சங்கரிப்பர், நிச்சயமாக மகேசுவர மூர்த்தி எக்காலமுந் திரோபவம் பண்ணுவர், அநாதி தொடங்கிச் சதாசிவமூர்த்தி அநுக்கிரகம் பண்ணுபவராம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே