மக்களாகப் பிறந்தோர் மறுமையைக் கருதல் வேண்டும் – அறநெறிச்சாரம் 154
நேரிசை வெண்பா
முற்பிறப்பில் தாஞ்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந்(து) இன்புறா நின்றவர் - இற்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகற் பாற்று 154
- அறநெறிச்சாரம்
*இப்புறத் தின்புறா.
பொருளுரை:
முற்பிறப்பில் தாம் செய்த அறங் காரணமாக உயர்குடியிற் பிறந்து இன்பத்தை நுகர்கின்றவர்கள் இம்மை யின்பத்தையே இன்னமும் கருதி முயல்வாராயின் மறுமையில் உறுவது துன்பமேயாகும்;
ஆதலால், இம்மை இன்பத்தில் செல்லுங் கருத்தை ஒழித்து மறுமை யின்பத்துக்குக் காரணமாகிய அறத்தினைக் கருதி முயன்று செய்தலே தக்கது.
குறிப்பு:
''இற்பிறந்து இன்புறா நின்றவர் இற்பிறப்பே'' என்றும் பாடம்.