எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும் எண்ணருநோய் துன்பம் அவர்க்கு – அறநெறிச்சாரம் 153

நேரிசை வெண்பா

உயிர்திகிரி யாக உடம்புமண் ணாகச்
செயிர்கொள் வினைகுயவ னாகச் – செயிர்தீரா
எண்ணருநல் யாக்கைக் கலம்வனையும் மற்றதனுள்
எண்ணருநோய் துன்பம் அவர்க்கு 153

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

குற்றம் தரும் வினை குலாலனாக நின்று, உயிர் காற்றையே தண்ட சக்கரமாகவும், எழுவகைத் தாதுவையே களிமண்ணாகவுங் கொண்டு குற்றத்தின் நீங்காத நினைத்தற்கரிய உடலாகிய பாண்டத்தைச் செய்யும் அவ்வுடலுள் அதனை யனுபவிக்கும் சீவர்க்கு அளவிடற்கரிய துன்பம் தரும் நோய்கள் பல உளவாம்.

குறிப்பு:

உயிர், உடம்பு, வினை, யாக்கை, நோய் முதலியன திகிரி, மண், குயவன், கலம், துன்பமாக உருவகிக்கப்பட்டுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-22, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே