என் விழிகள் கலங்கி நிற்பது ஏனோ 555

***என் விழிகள் கலங்கி நிற்பது ஏனோ 555 ***
ப்ரியமானவளே...
யுகங்கள் பல கடந்தாலும்
உன்னை காதலிப்பேன் நான்...
நாளைய பொழுது விடியுமா
என்று தெரியாத போதும்...
நம்பிக்கையோடு
உறங்க சென்றாலும்...
நம்பிக்கை இல்லாமல்
போனது எனக்கு என்மீது...
உன் இதய கதவும் இதழ்
மௌனமும் என்று திறக்குமோ...
இன்பங்களை கொடுத்து
துன்பங்களை துடைத்தவள் நீதான்...
அனுப்பும் குறுந்செய்திகளை
பார்த்தும் பார்க்காதவள் போல...
மௌனம்
கொள்வது ஏனடி...
என்னை தொட்டு பேசவும் தொடர்பு
கொள்ளவும் உனக்கு தோன்றவில்லையா...
உன்னை
புரிந்துகொள்ளவும் முடியவில்லை...
உனக்கு புரிய
வைக்கவும் தெரியவில்லை...
தனிமையில் இமைக்காத
நொடிகளில்கூட...
என் விழிகள் கலங்கி
நிற்கிறது உன் நினைவில்...
என் உயிரில் கலந்த உன்னை
ஆசையில் அள்ளி அணைக்க...
நீ என்
அருகாமையில் வேண்டும் என்றும்.....
***முதல்பூ.பெ.மணி.....***