மண்ணைத் தேடும் மரம்

தென்னை மரத்தை
கட்டிப்பிடித்து நிற்கும் பெண்ணே
யார் வரவை எதிர்பார்த்து
காத்து, கால்நோக நிற்கிறாய்?

மண்ணின் வரவே எனக்கு
மகிழ்ச்சியைத் தரும்.
காத்துக் கிடக்கிறேன் கால்நோக
பார்த்தவர் சொல்லுங்கள்
பசலை படர்ந்த என் முகத்தை
பார்த்ததாய்ச் சொல்லி.

உன் காலடியில் இருப்பது
மண் இல்லையா
எங்கிருந்து வரவேண்டிய மண்?
என்ன மண் அது?

சொல்ல வெட்கம்
இருந்தாலும் சொல்கிறேன்
என் மண் அழகான ஆண்மகன்
அவனுக்காகவே காத்து நிற்கிறேன்?

உன் காதலன் பெயர் 'மண்'ணா?
நீயென்ன மரமா?
அவன் தமிழ் மண் அல்ல.
நான் 🌲 மரம் தான்
தமிழ் மரம் அல்ல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Piya = Tree. Feminine name. Indian, Native American origin.
Man = Supernatural power. Masculine name. Indian, Hebrew origin.

எழுதியவர் : மலர் (25-Aug-22, 9:12 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 40

மேலே