சிவதை வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உள்ள மலமும் உதாவர்த்த மும்வயிற்றைக்
கொள்ளுபித்த வாதமும்போங் கூறுங்கால் - பிள்ளைகட்குச்
செப்பு கிரகமும்போந் தேனே யுலகத்துள்
தப்பில் சிவதைக்குத் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இது பழைய மலம், உதாவர்த்தம், பித்தம், வாதம், கபம், பாலகிரக தோடங்கள் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-22, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே