கருஞ்சிவதை வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காரமுடன் கைப்புமுண்டாங் காணா எலிவிஷத்தைப்
பாரனற் குன்மத்தைப் பற்றறுக்கும் - பாரில்
தெரிஞ்சுரைத்தோம் பேதிதருந் தேமொழியே காட்டுக்
கருஞ்சிவதைக் கந்தமது காண்

- பதார்த்த குண சிந்தாமணி

கருஞ்சிவதையின் வேரானது எலிவிடத்தையும் பித்த குன்மத்தையும் நீக்கி பேதியை உண்டாக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-22, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே