தீர்ந்ததா காமம்

அகவை ஆறுதான் என்பதால்,
மழலை மொழி மாறவும் இல்லை,
பருவம் கூட நெருங்கவும் இல்லை,
பாடசாலை படியேறிய சில தினத்தில்,
பாவி ஆசானின் பசிக்கு இரையானேன்,
இனி நீதி என்ன கிடைத்தாலும்,
இங்கு அநீதிக்கு முடிவில்லை,

என்றுதான் தீருமோ?
போர்முனையில் பொதிந்த வாழ்வும்,
என் பேனாமுனையில் வழியும் கண்ணீரும்!..


[கடந்த வாரம் ஒரு பள்ளியில் நடந்த கொடுமை]

எழுதியவர் : கவிமொழியன் (29-Aug-22, 2:33 pm)
சேர்த்தது : கவிமொழியன்
பார்வை : 2704

மேலே