ப்ரியம்வதா

உறங்கிக் கிடக்கும் இருண்மையின் சரித்திரத்தை
காலம் காத்து சிருஷ்ட்டிக்கின்றது.

வாழும் காலங்களில்
பைராகியின்
பிரியப்பட்டதாகிய பழமையின்
சூட்சமங்களை
காற்றில் நிவேதனமாக்கியிருந்தேன்.

இளமையினூடே திளைக்கின்ற லகரியில்
நகுமதையில் புதைகின்ற குளிரில்
சர்வதையில் ஒரு ஓரமாய் நின்று பனிப்படர்வாய் மறைந்திருந்து
என் மிச்சங்களை இரசித்துக் கொண்டிருக்கும்
குமரிமார்களைக் காண்கிறேன்.

காற்றில் கலந்த என் ஈணத்தின் நாதங்கள்
பலப்போதும்
இங்கெல்லாம்
அசரீரித் தெரித்து மறைந்திருக்கலாம்.

சந்தனப் பிளவின் படிவங்கள்
மேல் விளிக்கின்றன.

காதோர்த்து நின்றவர்களுக்கு
கைவளை கிலுக்கி
இதுவழியே நடந்து சென்றிருந்த
ஒரு ராஜகுமாரியின்
கால் சுவடுகளின் தாளம் கேட்கலாம்.
அவள் சார்ந்த
யார்யாரோவுடைய
சிரிப்பொலிகள் தட்டுப்படலாம்.
அவ்விடை நாழிகைகளில்
அவள் பிராயத்தை
அதுநிறுத்தியே சென்றிருந்தாள்.
அவளுமறியாதே
காதலின்
மோகத்தின்
மொட்டுகள் சிலவற்றை
மலர்த்தூவித்தூவிப் போயிருந்தாள்.

அவள் மனம் நாடியது எல்லாம்
கிரானைட் கற்களின்
கல்லறைகளின்மேல்
தானாடிவிழும் பூக்களிடம்
தென் படுகிறதா? தெரியவில்லை.

தேகத்திலுலரும்
பச்சைமண் வாசனை மாற்றி
அவள் வியர்ப்பின் சுவை உணர்த்திய
இராக்கள்வன் யார் என்று
தானாடிவிழும் பூக்களிடம்
தென் படுகிறதா? தெரியவில்லை

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் (30-Aug-22, 9:20 am)
பார்வை : 82

மேலே