இவர் பிள்ளயார், யார் இவர்
பார்வதி களிமண்ணால் இவரை உருவாக்கினாள்
பெறாத தந்தையோ இவர் தலையை வீழ்த்தினார்
இதை நான் நம்ப முடியுமா இல்லை நீங்கள்தான்
மண்ணாக நின்ற பாலகனை அவர் உயிர்வித்தார்
மண் உடலுக்கு புதுமையான வடிவம் கொடுத்திட
ஒரு யானை தலையை உடனே உருவாக்கினார்
பார்வதி வடிவமைத்த உடல் மீது பொருத்தினார்
அப்போது உயிர் கொண்டார் பாலன் பிள்ளையார்
சிவன் எந்த கொலை செயலையும் புரியவில்லை
அர்த்தநாரி என்ற பேருக்கு இணங்க பார்வதியும்
சிவனும் சேர்ந்து படைத்த தெய்வமே விநாயகர்!
இவை அனைத்தும் உலகிற்கு பொருள் உணர்த்த
அறிவில் சிறந்த பெருமை நடை போடும் யானை
கம்பீரம் பொறுமை இரண்டும் உடையது யானை
பிள்ளையார் இந்த குணங்கள் கொண்டு உள்ளார்
பெரிய காதுகள் இருப்பது, கூர்ந்த செவிகளுடன்
ஒருவர் தன்னுரையை குறைத்து அறிவுரையை
அதிகம் கேட்கவேண்டும் என்பதை உணர்த்தவே
யானைக்கு அழகு தும்பிக்கை, நமக்கு நம்பிக்கை
யானை முகத்திற்கு ஏற்ற பானை வயிறு கச்சிதம்
இது உணர்த்துவது மக்களின் சிந்தையும் செயலும்
ஒருங்கிணைந்து அமையவேண்டும் என்பதற்காக!
பிள்ளையார் கையில் கொழுக்கட்டை இருக்கிறது
அதை அவர் உண்பதுபோல சித்தரிக்கப்படவில்லை
அதிகப்படியான பொருள்படைத்த ஒவ்வொருவரும்
ஒரு தொகையை தன்னிடத்தில் வைத்துக்கொண்டு
நேரத்தில் தர்மத்திற்கு உதவிடவே இந்த சித்தரிப்பு!
முழுமுதற்கடவுள் அழகான உடையுடன் திகழ்கிறார்
நாமும் தார்மீகமான முறையில் உலக இன்பங்களை
அனுபவித்து வாழவேண்டும் என்பது இதன் நோக்கம்
கரிமுகன் சவாரிக்கு சின்னஞ்சிறு மூஞ்சூல் வாகனம்
இது எந்த தத்துவத்தை காட்டுகிறது? உலகவாழ்வில்
பெரிய சுமைகள் இன்னல்கள் வாழ்வில் வந்திடினும்
நம் மனம், ஒரு சுண்டெலியை போல மெல்லியதாக
அமைதியையும் மகிழ்ச்சியையும் கொள்ளவேண்டும்!
புரிகிறதா பிள்ளையார் ஏன் வருடாவருடம் பிறக்கிறார்
இந்நாளில் மேற்கூறிய மனித மேன்மை அறிவுரையை
அனைவருக்கும் அவர் கனிவுடன் நினைவு கூறுகிறார்!
பிள்ளயார் சதுர்த்தி மகிமையை நல்வழில் உணர்வோம்
மனதை தூய்மை படுத்தி குணத்தை அழகுபடுத்துவோம்
கர்வம் அனைத்தையும் அவர் காலடியில் விட்டிடுவோம்
தூய அன்பு பண்பு கொண்டு நிறைந்த அமைதி காண்போம்
அமைதியை கொண்டால் உண்மை ஆனந்தம் காண்போம்

