நெருங்கி வந்து முத்தமிட்டு செல்வாயா 555
***நெருங்கி வந்து முத்தமிட்டு செல்வாயா 555 ***
என்னுயிரே...
கெண்டை
மீன் விழிகள் கொண்டு...
செங்கொய்யா
இதழ்கள் கொண்டு...
பால்பண்
கன்னம் கொண்டு...
செவ்விளநீர்
மேனி கொண்டு...
பிரம்மன் செதுக்கி வைத்த
முழு பென்சிலை நீதானோ...
உன்னை
நான் சரணடைந்து...
என் மார்பில் நீ முகம்
புதைத்து நீ உறங்கவேண்டும்...
உயிரில் பாதிகலந்து
உணர்வில் பாதிகலந்துவிட்டாய்...
என் வாழ்வில்
முழுமையாக கலந்து...
என்னோடு கை
கோர்க்க வா என்னுயிரே...
கண்களுக்கு
உன் பேரழகும்...
என் மேனிக்கு உன்
தொடுதலும் கொடுக்கிறாய்...
என் உதடுகள்
என்ன பாவம் செய்தது...
நெருங்கி வந்து முத்தமிட்டு
செல்வாயா கொஞ்சம்...
நீ
சிறைபிடித்த பார்வையில்...
நான் உன் இதயத்தில்
கைதியாகிவிட்டேன் என்னுயிரே.....
***முதல்பூ .பெ.மணி.....***