உயிரின் மூச்சே தமிழே
உயிரின் மூச்சாய் உறைந்த தமிழே!!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
அகரம் முதலாய் னகரம் இறுவாய் //
சிகரம் கண்ட செந்தமிழ் மொழியே //
இயலும் இசையும் இனிதாம் கூத்தும் //
வயலொடும் வாழ்வொடும் வளர்த்தாய்க் காதலில் //
மானமும் வீரமும் மறத்தமிழ்ப் பண்பாய் //
வானகம் வையகம் வணங்கிடச் சிறந்தாய் //
செம்மொழி யாவினும் சிறந்தவள் நீயே//
அம்மொழிக் கெல்லாம் அன்னைதான் தாயே //
உயிரின் மூச்சாய் உறைந்த தமிழே /
உனையும் மறந்தால் உய்யுமா உலகே !!
-யாதுமறியான்.