அத்தை மகனே

அத்தை பெத்த மகனே
உன் வரவு எப்போ?
சித்திரைப் பாவை நான்
சத்தமாய் ஓர் செய்தி உன்
காதில் உரைப்பதுதான் எப்போ?
சிந்தும் காதலோடு நீ
முந்தானை தொடுவது எப்போ?
சந்தையிலே வாங்கி மாட்டிய
கண்ணாடி வளையல்
உடைவது தான் எப்போ?
மல்லிகை அமர்ந்த கூந்தலதை
உன் விரல் கோதுவது எப்போ?
மஞ்சள் இட்ட கன்னத்திலே
முத்தங்கள் பதிப்பது தான் எப்போ?
மகிழம் பூ மேனி
நுகர்வது எப்போ?
என் செவ்விதழ்
சுவைப்பவை தான் எப்போ?
செங்கரும்பு வெள்ளக்கட்டி
செல்லக் குட்டி சின்னக் கண்ணா
என்று அழைத்திடவே தொட்டில்
ஒன்று இடுவதுதான் எப்போ?
பட்டு மெத்தை காத்திருக்க.
பவள மங்கை பூத்திருக்க.
இருண்ட வானம் நீர் தெளிக்க.
குளிர்ந்த தென்றல் கூத்தடிக்க.
அத்தை மகனே சேர்த்தணைக்க
உமது வருகை அது எப்போ? எப்போ?
அங்கிருந்து துடித்தால்
செங்கரும்பு வெள்ளக்கட்டி
செல்லக் குட்டி சின்னக் கண்ணா
என்று அழைத்து தொட்டில்
ஒன்று இடுவதுதான் எப்போ?
பதில்
*****
இப்போதே கத்துக் குட்டி நானும்
வாறேன்டி/
வாள் வெட்டு பட்டேனும் தாலி ஒன்று தாறேன்டி/
அதட்டி விட்ட அப்பனை தட்டிப்புட்டு
மச்சான் உன் நெஞ்சத்திலே
ஒட்டிக்கப் போறேன்டி /