என்னவள் வேண்டும்
அருகில் அமர்ந்து ஆயிரம் கதைகள் பேசிட
கதைகள் தீர்ந்தால் மௌனத்தை பகிர்ந்திட
என்னவள் வேண்டும்!
தேகம் இரண்டும் உரசிட
காதல் தீ ஒன்று பற்றிட
என்னவள் வேண்டும்!
இச்சை என்னும் மேடை நாடகத்தில்!
வெட்கம் என்னும் ஆடை எதற்கு!
ஒன்றாய் இணைந்திட!
ஒரு உயிராய் பிணைந்திட ஆசை மட்டும் போதும்!
அங்கங்கள் தோறும் முத்த குளியல் போட!
வியர்வை என்னும் இச்சை மழையில் நனைய!
என்னவள் வேண்டும்!

