மீண்டும் ஒரு முத்தம் கொடுக்கவா 555

***மீண்டும் ஒரு முத்தம் கொடுக்கவா 555 ***
ப்ரியமானவளே...
மழைக்கால மாலை நேர
வானவில்லை போல்...
தினம் என் எதிரே
வந்து இன்பம் தருகிறாய்...
பல வண்ணம்
கொண்ட வானவில்லில்...
எனக்கு பிடித்த
வண்ணம் உண்டு...
அதில் உனக்கு பிடித்த
வண்ணம் என்னவோ...
தொட்டு பார்க்க
ஆசை இருந்தும்...
தொட முடியாத
தூரத்தில் வானவில்...
தொடும் தூரத்தில்
நீ இருந்தும்...
உன்னை தொட்டுபேச
மனதுக்குள் சிறு தயக்கம்தானடி...
எனக்கு பிடித்த
வண்ணம் உனக்கு பிடிக்குமோ...
பல நாட்கள் எனக்கு
பிடித்த வண்ணத்தில்...
விதவிதமான ஆடைகளை
நீ உடுத்தி வருகிறாய்...
உன் மழலை
மொழிகளை கேட்டு...
கரடு முரடான என் மொழிகள்
உன்னிடம் தோற்கிறது...
மீண்டும் ஒருமுறை
உன் ஜாடை பார்வையில்...
டேய் மாமா என்று
அழைத்து பேசடி...
மீண்டும் ஒருமுறை உன்
கன்னத்தில் இதழ் பதிக்கிறேன்.....
***முதல்பூ.பெ.மணி.....***