ஆசிரியன்
நல்லதோர் ஆசிரியன் கங்கை நதிபோல
நல்ல பெருநீராய் சமவெளி நிலமெல்லாம்
பாய்ந்து மண்வளம் பெறுக்கிடும் அன்னதாதா கங்கை ;
மூடராய் மாந்தர் நீரில் மாசு சேர்த்திடினும்
தான் மட்டும் மாசு ஏறாதிருக்கும் கங்கை
அதுபோல நல்லாசிரியன் உயர்ந்த தன்
போதனையால்
நாளை உலகிற்கு பல நல்ல ஆசிரியரை
உருவாக்குவார் அவரே தவறு செய்யும்
மாணவரை நல்வழி நடாத்தி செல்லும்
ஆச்சாரியனுமாய்த் திகழ்வார் தீங்கெனும்
அம்மாணாக்கர் மாசை தான் வாங்கி
தூய கங்கை நதிபோல
தப்பு பாதையில் சிக்கித் தவிக்கும்
மாணவரை பண்பு கரை சேர்க்கும்
கலங்கரை விளக்கம் ஆசிரியர்