இந்துப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அஷ்டகுன்மம் மந்தம் அசுர்க்கரச்சூர் சீதபித்தந்
துட்டஐயம் நாடிப்புண் தோஷங்கள் - கெட்டமலக்
கட்டுவிட விந்துப்பைக் காமியநோய் வன்கரப்பான்
விட்டுவிட விந்துப்பை விள் 1
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
(’ந்’ ‘ன்’ மெல்லின எதுகை)
சென்னிகண்,நா பல்தூர் செவிகவுள்கண் டம்பகநோய்
சந்நியா சங்காசந் தாகமிரைப் - புன்னிரத்த
மூலஞ் சிலந்திநளி மூடிகநஞ் சூதைவலி
சூலஞ் சிதையுமிந்தாற் சொல் 2
- பதார்த்த குண சிந்தாமணி
இந்துப்பால் எண்வகை குன்மம், மந்தம், அசிர்ச்சர பித்தம், கபம், நரம்புச் சிலந்தி, திரிதோடம், மலபந்தம், விடம், சுக்கிலம், சிலேட்டுமம், கடுவன், தலை, கண், நா, பல், காது, கழுத்து, யோனி நோய்கள், கண்காசம், வறட்சி, சுவாசம், இரத்தமூலம், சிலந்தி, தேள், எலிவிடங்கள், வாதக் கடுப்பு, குத்தல் இவை கெடும்