கலங்காத கப்பலோட்டிய தமிழன் திரு வ உ சிதம்பரனார்
என்றென்றும் நினைவு கொள்வோம் கலங்காத கப்பலோட்டிய தமிழன் திரு வ உ சிதம்பரனாரை
என் தமிழே,என் தமிழ் இனமே;
வெந்து போனது போதும்;வேதனை அடைந்தது போதும்;
வெள்ளையன் நம்மை ஆண்டது போதும்;
வேற்று நாட்டானிடம் எம் தேசம் அடிமைப் பட்டது போதும் என்று
திலகர் வழி பின் பற்றினாய், இந்திய தேசிய இயக்கத்தோடு இணைந்தாய்;
திரும்பும் இடமல்லாம் வீர முழக்கம் இட்டாய்;
திருந்திட மக்களை தூண்டிவிட்டாய்;
தேசபக்தியை வளர்த்துவிட்டாய்;
தெய்வமாய் எங்கள் மத்தியில் வாழ்ந்து நிற்கின்றாய்;
தீராத பகையையும் கும்மியரிடம் பெற்றாய்;
ஈனமோ அவமானமோ இனியும் எம் தேசத்திற்கு வேண்டாம் அடிமை வாழ்வு என்றே முழங்கினாய்;
கும்மியரை விரட்ட கூடி விட்டோம் என்றாய்;
குடிகெடுத்த கூட்டத்தை கூண்டோடு ஒழிக்க
கோஷம் எழும்பிவிட்டாய்;
வேசம் போடும் வெள்ளையனை விரட்ட,
வீர முழக்கம் செய்து விட்டாய்;
செங்குருதி கொட்டினாலும் வீரத் திலகம் இட்டே சேர்ந்தே போரிடுவோம்;
சோர்ந்து போகமாட்டும்;
செத்தொழிந்தாலும் இனி வெள்ளையன் செய்த பொருளை வாங்கிடோம்;
சோகத்தில் குடும்பம் விழுந்தாலும்
தேகத்தில் வலிமைதான் குன்றிடுமோ;
விடுதலை சுவாசத்தை சுவாசிக்காமல்,
விடைதான் பெறுமோ;
இந்த கட்டை தான் வேகுமோ, என்றே வீரமுழக்கம் விட்டாய்.
விளையாட்டுக் காகிதக் கப்பலை வெள்ளோட்டம் விடவில்லை,
சோகம் தொடர்ந்தாலும் சொத்தை விற்றே;
சட்டத்தொழிலை விட்டே;
வெள்ளையனுக்கு எதிராக கப்பல் வாங்கி
வங்கக் கடலில் கப்பலை வெள்ளோட்டம் விட்ட வீர மறவர் தான் வா ஊ சி அய்யா நீவீர்;
கப்பலோட்டிய தமிழன் என்றார் உம்மை;
கூட்டு இயக்கத்தின் முன்னோடியே;
கூட்டுறவு தொழிலாளர்கள் இயக்கம் துவங்கி சுதேசி இயக்கத்திற்கு வித்திட்டாய்;
சுதேசி பொருளை வாங்க விற்க சுதேசிப் பண்டகசாலையை தூத்துக் குடியில் சமைத்தாய்;
நூற்பாலை கட்டி சுதேசிய இயக்கத்தை முடிக்கி விட்டாய்;
சென்னை விவசாய சங்கம் என்பதோர் சங்கத்தையும் அமைத்தாய்;
விஞ்ஞானம் வழி விவசாயம் முன்னேற்றம் காண கனவு கண்டாய்;
விழுந்து அழுது மடிந்தது போதும்,
வீரம் இருப்பர் விரைந்தே வாரும் என்று வீர முழக்கம் இட்டாய்;
வீரம் அற்றவர் வீட்டில் வீற்றிருந்தே வேடிக்கை பாரும் என்று முழங்கினாய்;
பாரதத்தை வழிபட்டால் பாவமோ;
எம் மண்ணில் எம் மக்கள் வீர முழக்கம் விட்டால் பழியாமோ;
பகைதான் வருமோ, பாவிகள் தான் ஆவோமோ;
எம் நாட்டு மக்கள் அடிமை பட்டே கிடக்க வேண்டும் என்பது என்ன சாபமோ;
முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ; என்றே பாரதியின்
உன் பானில் முழங்கினாய்பாரத்திடை அன்பு செலுத்தினால் பாவமோ
பழியாகுமோ மனஸ்தாபமோ;
படைத்தவன் தந்த சாபமோ;
சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம் சாயுமோ எங்கள் ஜீவன் ஓயுமோ;
நெஞ்சம் தான் வேகுமோ என்றே முழங்கினாய்;
சிறை சென்று சித்திர வதை பெற்று,
செக்கிழுத்த செம்மல் என்ற பெயரையும் பெற்றாய்;
இரு ஆயில் கைதி தண்டனை பெற்று,
இறுதியில் பிச்சை வாழ்வை துவங்கினாய்;
பிடிவாதமாய் தனிமையில் வாழ்ந்து காட்டினாய்;
பிடிப்புடன் எழுத்து பணியை தொடர்ந்தாய்;
தமிழ் பண்டிதனாய் தமிழுக்கும் தொண்டு செய்தாய்;
உடமைகள் யாவற்றையும் தாய் மண்ணுக்காக கொடுத்து
உத்தம அமரன் ஆனாய்;
விடுதலை சூரியன் உதிக்கு முன்னே
விட்டே சென்றாய்; நவம்பர் 18 , 1936 ல்;
உன் ஆசையை வித்தானது;
உன் புரட்சி சொந்தமானது;
எமது நாடு சுதந்திரம் அடைந்தும் உன்னை மறந்து விட்டது;
உன் சுவாசக்காற்று வங்கத்து கடல் அலைகள் சுமந்து வரும் வரை,
எங்களை சுற்றியே வரும்
எங்களுக்கு வீரத்தை ஊட்டியே வரும்;
இனி ஒரு அடிமை வாழ்வு வேண்டோம் என்ற
உனது குரல் கடல் அலையாய் ஒளித்தே வரும்
காற்றில் மிதந்தே வரும்;
உனது சுதே இயக்கம்
உமது சிந்தனயும் சித்தாந்தமாம் விஞ்ஞான தொழில் விவசாய புரட்சி
கூட்டு சங்க முயற்சி, குழும வளர்ச்சி,
இந்த சுதந்திர பாரத மண்ணில் சாதனை படைத்தே தீரும்
நீவீர் பிறவி எடுத்த தினமாம் செப்டம்பர் 5
, இளைஞர்களின் விழிப்புரணச்சி நாளாய் கொட்டாடுவோம்
என்றென்றும் நினைவு கொள்வோம் கலங்காத கப்பலோட்டிய தமிழன் திரு வ உ சிதம்பரனாரை
அன்பன் அ. முத்துவேழப்பன்