பஞ்ச உப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நீராமை அற்புதப்புண் நெஞ்சுவலி மாகுன்மம்
பேராக் கிரகணிபி லீகமந்தம் - தீராக்கால்
விஞ்சவுப்பைக் குக்கிநோய் மெய்ச்சூலை யும்பறக்கும்
பஞ்சவுப்பைத் தின்பையெனிற் பார் 1
- பதார்த்த குண சிந்தாமணி
நேரிசை வெண்பா
பஞ்ச லவணம் பயித்தியகுன் மம்போக்கும்
விஞ்சியசி லேஷ்மத்தை வீழ்க்குங்காண் - கிஞ்சுகமே
தீபனமுண் டாக்குந் திரிதோஷம் போக்கிவிடுஞ்
சோபனமாம் இம்மொழியைச் சொல் 2
- பதார்த்த குண சிந்தாமணி
பஞ்ச உப்பினால் ஆமைக்கட்டி, சிறுபுண், நெஞ்சுவலி, குன்மம், வாதகிரகணி, பிலீகம், மந்தம், வாதம், சிலேட்டுமம், குத்தல், பித்த குன்மம், கபம், முத்தோடம் இவை நீங்கும்; பசியெடுக்கும்