தமிழ்மொழி

எம்மொழிக்குமில்லாப் பெருமை
எம்மொழிக்கு உண்டு...

தேவமுதும் திகட்டிடுமே
தமிழமுதின் தீஞ்சுவையில்...

தாய்மடியில் தவறியது
தமிழ்மொழியில் கிட்டியது...

சிந்தையிலும் சந்தமடி
செம்மொழியின் ஆளுமையில்...

உலகெங்கும் உன்மணம் கமழ
உன்மத்தம் கொண்டேனே...

ஆழ்கடலே உனை அருந்தாமல்
ஆறாது என் தாகம்...

ஆயிரம் யுகங்கள் கடந்தாலும்
அழியாது நின் புகழே !

எழுதியவர் : Parveen (6-Sep-22, 7:03 pm)
சேர்த்தது : Parveen
பார்வை : 3776

மேலே