விடியல் காட்டும் சூரியன்கள்
அகரம் கற்று
சிகரம் தொட
அச்சாணியாய்
சுழல்வது
ஆசிரியர்களே...!
ஏறியவர் எங்கோ
மேலோங்கி இருக்க
ஏற்றியவர் மட்டும்
இங்கேயே காத்திருக்கிறார்
அடுத்தவருக்காக ...!!
சிதைப்படாத கற்கள்
சிலைகள் ஆவதில்லை...
ஆசிரியர்தம்
வழிநடவா மாணவர்
ஆன்றோர் ஆவதில்லை...!!!
ஒவ்வொரு பிள்ளைக்கும்
முதல் ஆசிரியர்
பெற்றோர்...
இரண்டாவது பெற்றோர்
ஆசிரியரே...!!!
ஒவ்வொரு தாயும்
தன் கருவைத்தான்
ஈரைந்து மாதங்கள்
சுமக்கிறாள்...
ஒவ்வொரு தகப்பனும்
தன் வாரிசைத்தான்
ஏற்றிவிட உழைக்கிறான்...
ஆதி அந்தம்
பாராமல்
குலம் கோத்திரம்
காணாமல்
ஜாதி மதம்
கேளாமல்
தன்னிடம்
கற்க வந்தவனை
காலம் கடந்து
ஞாலம் போற்றும்
சான்றோனாக
மாற்றும்
ஆசிரியர்
ஒரு அற்புதமே ....!!!
மாதா பிதா
வரிசையில்
தெய்வத்திற்கு
முன் நின்று
எங்களை
நல்வழிப்படுத்திய
எம் ஆசிரியப்
பெருமக்களின்
பாதம் பணிகிறேன்...!!!