ஆசிரியர்
ஆசிரியரின் மகத்துவம் !!
----'------'-----'
(நேரிசை ஆசிரியப்பா )
கற்றிடக் கற்றுத் தந்தவர் முற்றும்
கற்றவர் நல்லவர் வல்லவர் பெற்றத்
தந்தையும் தாயுமாய் ஆனவர்
வாழ்க்கைச்
சந்தையின் போட்டியில் வென்றிட வேண்டும்
தகுதிகள் வளர்த்த வல்லோர்
வெகுமதியை விரும்பா ஆசிரியத் தெய்வமே!!
-யாதுமறியான்.