இந்தப் பொண்ணுக்கு என்னடா குறை

ஏன்டா முருகா, ஏன்டா அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லற?
@@@@@
இந்தக் காலத்தில் கல்யாணம் ஆகாத எந்தப் பொண்ணும்மா கொண்டை போட்டுட்டு இருக்கிறாங்க?
#@@@@@@@
டேய் அவள் துணைப் பேராசிரியா வேலை பாக்கிறா. கல்லூரில இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டா. நீ என்னடா குறையக் கண்டுபிடிச்ச?
@@@@@@@
இந்தக் காலத்து பொண்ணுங்க தலைவிரி கோலமா சுருட்டை முடியோட இருக்கிறாங்க. சிலர் பரட்டையா முடி அலங்காரம் பண்ணிக்கிறாங்க.

ஏராளமான சின்னச் சின்னச் சடையாப் பின்னித் தொங்கவிட்டுக்கராங்க. அதுதான் நாகரிகம். இந்தப் பொண்ணு பழங்காலத்து நடிகைங்க மாதிரி கொண்டை போட்டுட்டு இருக்குது.

எழுதியவர் : மலர் (13-Sep-22, 5:27 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 112

மேலே