விழிகளை நனைக்கும் சில நினைவுகள் 555

***விழிகளை நனைக்கும் சில நினைவுகள் 555 ***


உயிரே...


நாம் சேர்ந்து ரசித்த கடற்கரை
சாலை வண்ணமலர் பூங்கா...

மாலைநேர கதிரவன்
மழைமேக வானவில்...

பகல்நேர நிலவு
விடிவெள்ளி நட்சத்திரம்...

எதுவும் மாறவில்லை நானும்
ரசிக்க மற
ந்ததில்லை...

எனதன்பு இன்றுவரை
உனக்கு புரியவில்லை...

காரணமும் இன்றுவரை
தெரியவில்லை எனக்கு..
.

எப்போதும் இடைவெளிவிட்டு
சேர்ந்து சென்றதில்லை...

இந்த இடைவெளி இன்று
னோ புரியவில்லை...

நினைவுகளை சுமந்து
வாழ்வது சுகம் என்றாலும்...

சில நினைவுகள்
விழிகளை ஈரமாக்குதடி...

பலநேரம்
அழுகின்ற மனம்...

சில நேரம்
சந்தோசப்படும் மனம்...

உன்னைப்போல எவரும்
என்னை நேசித்ததில்லை...

நெருங்கும் போதெல்லாம்
வில
கி செல்வதேன்...

உனக்காக காத்திருப்பேன் நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (16-Sep-22, 5:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 387

மேலே