அன்னை என்ற தெய்வம்
அன்னை என்ற தெய்வம்
அன்பினால் உண்டான உயிரை அன்புடன் வளர்த்து
ஆசையோடு உடைகளை அணிவித்து அழகு பார்த்து
இன்னிசையால் தாலாட்டி பாலூட்டி உறங்க வைத்து
ஈடில்லாத வகையில் என்னைச் சீராட்டி அரவணைத்து
உலகத்தின் உண்மை நிலையை ஆசானாய் போதித்து
ஊரெல்லாம் பாராட்டிட ஊக்கமளித்து உயர செய்து
எந்நிலையிலும் கூட இருந்து எல்லாம் அறியவைத்து
ஏன் என கேளாமல் வேண்டியது கிடைக்க வழி அமைத்து
ஐயம் வரும் நேரம் அபயம் அளித்து நிழலாக தொடர்ந்து
ஒன்றும் வேண்டாது என்னலனையே மட்டும் கவனித்து
ஓசையில்லாமல் எந்நாளும் ஒரு சுமை தாங்கியை போல்
வாழும் அன்னையை பார்க்கையில் தெய்வத்தை கண்டேன்