தீயோரை உண்பிப்பது தீங்காம் – அறநெறிச்சாரம் 175

நேரிசை வெண்பா

கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்த்தார் உண்ணிற் பெறலாம் - கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு 175

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய குணங்களையுடையார் தமக்கு உண்டி முதலியன உதவினாரையும் பிறவிப் பிணியின் நீக்கத் தாமும் நீங்குவர்,

அக்குணங்களில்லாதவர்கள் பிறர் கொடுப்பதை உண்டு தம்மை உண்பித்தாரையும் இழுத்துச் சென்று நரகிடை வீழ்த்துத் தாமும் வீழ்வர்;

ஆதலால், இல்லற நெறிக்கண் நின்று ஈகையால் உய்யும் நெறியை அடையக் கருதுகின்றவன் குற்றமற்ற குணத்தினையுடைய துறவிகளை ஊட்டின் அதனை அடையலாம்.

குறிப்பு: கிழக்கு - பள்ளம்; ஈண்டு நரகம்; ஈர்த்து என்பது ஈத்து என இடைக் குறைந்து

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-22, 7:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே