நாடும் வெற்றிதூர மில்லையே - ஆசிரிய விருத்தம்

ஒன்பதிந்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா காய் மா காய் மா காய் / மா காய் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

செல்லும் வழியதனில் அகலத் திறக்கும்,நீள் கதவுக் குப்பின்னே
..சேருஞ் சக்திவேறாய் இருப்பினும்
வெல்லும் வாழ்வதனில் விரைந்தே முன்னேற வேண்டும் முயற்சியுடன்
..விளங்கும் ஆன்மபலத் துணையுடன்
ஒல்லும் நேர்மையுடன் நேர்செல் வழி,திறமை வெற்றிப் படிகளெல்லாம்
..உயர்வின் ஏற்றமதை உய்விக்கும்;
நல்ல பணியாளர் தம்மை அரவணைத்துச் செயலைச் செய்துவர
..நாடும் வெற்றிதூர மில்லையே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-22, 3:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே