காதலி நிலவானால் - அறுசீர் விருத்தம்

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)

காதலியும் நிலவானால் விண்மீன்கள் கருத்துடனே
..காக்கும் என்னை;
ஆதரவாய் அன்றாடம் நிலவொளியாய்க் காதலியின்
..அன்பும் வேண்டும்;
தூதெனவே விண்மீன்கள் துணையிருக்கத் துன்பமின்றித்
..தொடரும் இன்பம்!
நாதமென அவையெல்லாம் நல்லுறவாய்ச் சுற்றிநின்றே
..நலமுஞ் சேர்க்கும்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-22, 3:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே