சிவனை நினைந்து சிந்தித்தேன் - அறுசீர் விருத்தம்

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

கவிதை ஒன்றை எழுதிடவோர்
..கருத்தை நானுந் தேடுங்கால்
கவலை மிகவே காத்திருந்தேன்;
..கருத்தும் ஏதும் தோன்றவில்லை!
குவியும் என்றன் வருத்தத்தால்
..கூடும் வலியும் தலையினிலே!
சிவனை நினைந்து சிந்தித்தேன்;
..சிறந்த கவிதை கிடைத்ததுவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-22, 1:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே