தினம் மலரும் நினைவு பூக்கள் 555
***தினம் மலரும் நினைவு பூக்கள் 555 ***
ப்ரியமானவளே...
உன் நினைவு சாரலில் சுகம்
காண்கிறேன் தினம் தினம்...
தினம் மலரும்
பூக்களை போல...
தினம் மலரும் உன்
நினைவு பூக்கள்...
உன் முதல் அன்று
பார்வையில் யோசித்தேன்...
நீ வரைந்து வைத்த ஓவியமா
நடந்து செல்லும் சிலையா என்று...
கைப்பிடி இதயம்தான் நீ மட்டுமே
அதில் ஆட்சிசெய்வது எப்படி...
உன் காதல்கூட ஒருநாள்
குறையும் நம் மழலைக்காக...
என் காதல்
என்றும் குறையாதடி...
எத்தனை
மொழிகள் கற்றாலும்...
நீ பேசும் பார்வை மொழியில்தானடி
தாய்மொழியும் வாழ்கிறது...
வாய்விட்டு பேசும் மொழியைவிட
ஜாடைமொழி தனித்துவமானது...
எத்தனை பேர்
நம்மை சுற்றி இருந்தாலும்...
நீ ஜாடையில் கொடுக்கும்
முத்தம்கூட கேட்கிறது...
என்
செவியில் சப்தமாக.....
***முதல்பூ.பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
