காலங்கள் வாழும் காதல்
விதைப்பவன் விதைத்த விதைகளுள்.
நன் நிலம் வீழ்ந்தவை
நற்பலன் தந்தன
தரிசில் வீழ்ந்தவை
குறுபலன் தந்தன
பாறையில் வீழ்ந்தவை
முளைக்காது
கருகி முடித்தன வாழ்வினை!
ஆயினும்
பாறையின் இடுக்கினில்
வீழ்ந்த
ஆலின் சிறுவிதை
ஒருதுளி நீருக்காய்
ஆண்டுகள் பொறுத்து
மெல்லத் துளிர்த்து
பாறைகள் நொறுக்கி
விருட்சமாய் எழுந்து
யுகங்கள் பார்த்திடும் !
நல்ல நிலத்து
விளைச்சலாய்
வாழ்ந்திட;
பாறையில் வீழ்ந்தாலும்
ஆலின் விதையாய்
காதல் எழுந்திடும்
காலங்கள் வாழ்ந்திடும்
-யாதுமறியான்.