காதலின் ஊற்றுக்கண்கள்

காதலின் ஊற்றுக் கண்கள்
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷⚘⚘

பார்வை இல்லா
மனிதருக்கு
விழிகள் ஏன் ?

விழிகள் இல்லா
மனிதருக்கு
மொழிகள் ஏன் ?

விழிகளும் மொழிகளும்
அருளே என
அறியாதோர்க்கு
அனைத்தும் ஏன் ?

உங்கள் பார்வையை
வாசித்து
நேசிக்க யாசிக்கும்
திசைப்பக்கம் திருப்புங்கள்
விழிகளிரண்டையும் !!

விழிகள் கருணையின்
கண்களாக
மொழிகள் காதலின்
ஊற்றுக் கண்களாகட்டும்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (8-Oct-22, 9:02 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 109

மேலே