கனவே கலையாதே

கனவே கலையாதே
**********************
மூடும் விழிக்குள் முளைக்கும் வித்தே
மூங்கில் துளைக்குள் முனகும் காற்றே
தேடும் உயிரைத் திருடும் நிலவே
தேனாய் அமுதம் தெளிக்கும் மலரே
வாடும் பயிர்க்காய் வழியும் ஊற்றே
வற்றா நிலையை வழங்கும் நதியே
காடும் மகிழக் கூவும் குயிலே
கனியின் சுவையே கனவே கலையாதே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Oct-22, 1:44 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kanave kalaiyaathe
பார்வை : 231

மேலே