பொய்யில் கவிதையெழுதச்சொல்லி கொல்லுகிறாய்

செவ்விதழ்ச் சித்திரமே
......சிற்பியின் கற்பனையே
கொய்யாத மாங்கனியை
....கன்னத்தில் ஏந்துகிறாய்
கொய்த மல்லிகையை
....கூந்தலில் சூடுகிறாய்
பொய்யில் கவிதையெ
.....ழுதச்சொல்லி கொல்லுகிறாய்

கம்பன் மெச்சிய கோலோச்சிய
பாவினம் கலிவிருத்தம்
அதுபோல் சற்று வந்திருக்கிறதா
யாப்பார்வலர்களே !















.

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-22, 3:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

மேலே