உன் கயல்விழியால் கண் இமைக்காதே 555

***உன் கயல்விழியால் கண் இமைக்காதே 555 ***
ப்ரியமானவளே...
உன்
செவ்விதழ்களை குவிழ்த்து...
கொஞ்சி பேசும்
காதல் மொழியில்...
என்
தாய்மொழியும் இனிக்குதடி...
உன்
உதட்டருகே மச்சம்...
திருஷ்டி பொட்டாக
வைத்தானோ பிரம்மன்...
உன் மான்விழிகளில் ஏனடி
கரு மை வண்ணம் தீட்டுகிறாய்...
உன் கயல்விழியால்
கண் இமைக்கவா கண்ணே...
உன் கார்மேக கூந்தலை கொஞ்சம்
அள்ளி முடிந்துகொள்...
உன் கூந்தல்
அலைபாயும் நேரம்...
சூறாவளியால்
நான் தினறுகிறேனடி...
உன் கொத்தமல்லி மூக்குத்தி
அழகில் என்னை கொள்வதேனடி...
உன் பளிங்கு
கழுத்தை அலங்கரிக்கும்...
தங்க சங்கிலியை
நீ எங்கே வாங்கினாய்...
உன் வளர்பிறை நெற்றியில்
அடுக்கடுக்காய் எத்தனை பொட்டுகள்...
நான் எங்கே வைப்பது
என் கைகளால் உனக்கு குங்குமம்...
உன் இதழ் ரேகையும்
என்னிதழ் ரேகையும்...
ஒன்றாக சேர்வது
எப்போதடி மானே.....
***முதல்பூ.பெ.மணி.....***